ரிஆர்ரி தமிழ்ஒலி என்ற பெயரில் ஐரோப்பாவில் பிரான்ஸ் நாட்டிலிருந்து முதல்முதலில் 1997ம் ஆண்டு தைப் பொங்கல் நாளன்று ஆரம்பிக்கப்பட்ட எமது வானொலி 2000ம் ஆண்டுவரை மிகச்சிறப்பாக இயங்கிவந்தது.
2000ம் ஆண்டு இந்த வானொலியை அரசியல் இயக்கம் ஒன்றுடன் இணைக்க வானொலியை நடாத்திய றேடியோ ஆசியா நிறுவனம் முடிவுசெய்தது.
அப்போது, அதன் உருவாக்கத்திற்கு வித்திட்டவரும், றேடியோ ஆசியா நிறுவனத்தின் இயக்குனர்நாயகமாக பணியாற்றிவந்தவருமான மூத்த பத்திரிகையாளர் எஸ்.எஸ். குகநாதன் அவர்கள் றேடியோ ஆசியா நிறுவனத்திலிருந்து வெளியேறி, டான் நெற்வேர்க் என்ற நிறுவனத்தை ஆரம்பித்து அந்த நிறுவனத்தின்மூலம் ரிஆர்ரி தமிழ்அலை வானொலியை ஆரம்பித்தார்.
2000ம் ஆண்டு நர்த்தார் தினத்திலிருந்து ரிஆர்ரி தமிழ்அலை என்ற பெயரில் அதே வானொலி தொடர்ந்து ஒலிபரப்பாகிவருகின்றது.
டான் ரெலிவிசன் நிறுவனம் இப்போது டான் தமிழ்ஒளி என்ற பெயரில் தமிழ்த் தொலக்காட்சி சேவையையும் டான் தமிழ்ஒலி என்ற பெயரில் வானொலி சேவையையும் இலங்கைத் தலைநகர் கொழும்பிலிருந்து ஒலி-ஒளிபரப்பிவருகின்றது.
பிரான்ஸ் நாட்டிலிருந்து ரிஆர்ரி தமிழ்அலை வானொலியை தொடர்ந்து நடாத்திவருகின்றது.

 

     
 
 

www.trttamilalai.com